NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கணவன் கொலை!

பிங்கிரிய – தியகெலியாவ பிரதேசத்தில் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கணவன் கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (21) இரவு இடம்பெற்றுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக கணவன் இந்த செயலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 33 வயதுடைய மனைவி உயிரிழந்துள்ளதாகவும் அவர் தியகெலியாவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொலை சம்பவம் தொடரல்பில் 40 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு நீண்டத் தூரம் சென்ற நிலையில் கணவர் இவ்வாறு கொலை செய்துள்ளார்.

Share:

Related Articles