NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மனைவியை பாலியல் தொழிலுக்குள் தள்ள முற்பட்ட கணவன் – யாழில் சம்பவம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

டிக்டொக் காதல் மனைவியை பாலியல் தொழிலுக்குள் தள்ள முற்பட்ட கணவன் காரணமாக தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில் பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த வருடம் டிக்டொக் வலைத்தளம் ஊடாக சீதுவை பகுதியைச் சேர்ந்த இளைஞனுடன் காதல் வயப்பட்டிருந்த நிலையில், பாடசாலை கல்வியை கைவிட்டு வீட்டை விட்டு வெளியேறி சீதுவைக்குச் சென்று காதலனை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

திருமணமாகி சில வாரங்களில், சீதுவை இளைஞன் தனது காதல் மனைவியை பணத்துக்காக பாலியல் தொழிலுக்குத் தள்ள முயன்றுள்ளார். அதனையடுத்து மாணவி அங்கிருந்து தப்பித்து யாழ்ப்பாணம் திரும்பி பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சீதுவை இளைஞன் மாணவியை தொடர்பு கொண்டு தன்னிடம் வருமாறு அழைப்பு விடுத்திருந்ததுடன், இல்லையெனில், காதலித்த நேரங்கள் மற்றும் திருமணமான பின்னர் இருவரும் மிக நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த குறித்த மாணவி தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில், உறவினர்களால் காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Related Articles