NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மற்றுமொரு பஸ் விபத்து – 8 பேர் காயம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் ஹெல்பொட பிரதேசத்தில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

சுற்றுலாவுக்குச் சென்றவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது, பஸ்ஸில் சுமார் 20 பேர் பயணித்துள்ள நிலையில், அவர்களில் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தின் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles