NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மலேஷியாவில் ஓரின சேர்க்கையை ஆதரிக்கும் சுவிட்சர்லாந்து நிறுவன தயாரிப்புகளுக்கு தடை !

மலேஷியாவில் ஓரின சேர்க்கை என்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதோடு ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்த சூழலில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த கைக்கடிகார தயாரிப்பு நிறுவனம் தங்களின் தயாரிப்புகள் மூலமாக மலேஷியாவில் ஓரின சேர்க்கையை ஊக்குவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து கடந்த மே மாதம் மலேஷியாவில் உள்ள சுவிட்சர்லாந்து நிறுவனத்துக்கு சொந்தமான கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஓரின சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த கைக்கடிகாரங்கள், கடிகாரங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஓரின சேர்க்கையை ஆதரிக்கும் குறிப்பிட்ட அந்த சுவிட்சர்லாந்து நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மலேஷியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி அந்த நிறுவனத்தின் கைக்கடிகாரங்கள் மற்றும் கடிகாரங்களை வைத்திருக்கும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என மலேஷியா அரசு எச்சரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles