NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மலையேற்றத்தின் போது உயிரிழந்த வெளிநாட்டு பெண்ணின் சடலத்தை அடையாளம் காண தோழி வருகை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கையில் கடுகண்ணாவை பிரதேசத்தில் மலையேற்றத்திற்காக சென்றிருந்த வெளிநாட்டு பெண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண அவரது தோழி ஒருவர் இலங்கை வந்துள்ளார்.

சடலத்தை அடையாளம் காண்பதற்காக அவரது தோழி தூதரக அதிகாரிகளுடன் கண்டிக்கு பயணிக்கவுள்ளார். அதற்கமைய, இன்று (17) அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முடியும் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

டென்மார் பெண்ணின் உடல் மலை அடிவாரத்தில் கண்டெடுக்கப்பட்ட போது, அது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவரது உடல் கடந்த 14ஆம் திகதி வனப்பகுதியில் மலை அடிவாரத்தில் கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

குறித்த பெண் கண்டி ஹோட்டலில் இருந்து மலையேறுவதற்காக சென்ற போது, கடந்த 10ஆம் திகதி இந்த மரணம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேசத்தில் நிலவும் குளிர் காலநிலை காரணமாக உடல் விரைவாக சிதைவடையவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பிறகே அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றும், அவரது மரணம் குறித்து, இந்தியாவில் உள்ள டென்மார்க் தூதரகம் மூலம் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க வெளியுறவு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மலையேறுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததாகக் கூறப்படும் டென்மார்க் பெண்ணின் சடலம் தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் கண்டெடுக்கப்பட்ட போது, 20 டொலர் தாள்கள் ஐந்தும், இரண்டு 05 டொலர் தாள்கள் மற்றும் 62000 இலங்கை நாணயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது கையடக்க தொலைபேசி இன்னும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles