NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மிக குறுகிய காலத்தில் இராமர் சிலை பிரதிஷ்டை!

இந்தியா – உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் இராமர் கோயிலில் இராமர் சிலை பிரதிஷ்டை 84 விநாடி முகூர்த்த காலத்தில் நிறைவு செய்யப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா அயோத்தி மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பல்வேறு வகைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அயோத்தியில் ஒவ்வொரு நூறு மீற்றர் தொலைவுக்கு ஒரு மேடை என அமைக்கப்பட்டு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, இன்று நண்பகல் 12.29.08 விநாடிக்கு 121 வேதகர்கள் வேத மந்திரம் முழங்க பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 16 பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

4.25 அடி உயரம் கொண்ட இந்த பால ராமர் சிலையின் அகலம் 3 அடியாகும். மொத்த எடை 1.5 டொன். சிலை வடிவமைக்கப்பட்ட கல்லானது, கர்நாடகத்தின் கருப்பு பாறைகளிலிருந்து செதுக்கப்பட்டதுடன், இராமர் சிலையின் அடித்தளமானது தாமரையில் இராமர் நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles