மியன்மாரின் மியாவாடி பிராந்தியத்தில் இணையக்குற்ற முகாம்களில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தாய்லாந்து அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளார்.
தாய்லாந்து தூதுவர் பைடூன் மஹாபன்னபோர்ன் (Pயவைழழn ஆயாயியnnயிழசn) மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு உதவியை கோரியுள்ளார்.
இணையக்குற்ற முகாம்களிலிருந்து 28 இலங்கையர்களை மீட்பதற்கு தாய்லாந்து அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், குறித்த பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 40 இலங்கையர்களை மீட்பதற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், இலங்கை மற்றும் தாய்லாந்துக்கு இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்தவும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் தாய்லாந்து தூதுவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நவீன விவசாய தொழில்நுட்பப் பயன்பாடு, ருஹ{னு பல்கலைக்கழகம் மற்றும் வயம்ப பல்கலைக்கழகத்தின் விவசாய பீடங்கள் இணைந்து அறுவடைக்கு பிந்திய தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல் போன்ற ஆராய்ச்சித் துறைகளுக்கான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.