NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘மீண்டும் ஜனாதிபதியாவதில் எந்தவித சிரமமும் இல்லை’ – மைத்ரிபால

நாட்டில் தலைதூக்கியுள்ள போதைப்பொருள் பிரச்சினைகள் மிகவும் கடுமையானவை. ஒழிப்பதிலும் ஏனைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மிகவும் திறமையான முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இலங்கையின் ஜனாதிபதியாக இருந்தவர் என்ற வகையில் அந்த அனுபவத்துடன் மீண்டும் ஜனாதிபதியாக வருவதில் தனக்கு சிரமம் இல்லை என்று குறிப்பிட்டார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இன்று வர்த்தகர்கள் மகிழ்ச்சியாக இல்லைஇ அரச ஊழியர்கள் மகிழ்ச்சியாக இல்லைஇ மீனவர்கள் மகிழ்ச்சியாக இல்லைஇ சாதாரண குடிமக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று தெரிவித்துள்ள அவர், நாட்டில் தலைதூக்கியுள்ள போதைப்பொருள் பிரச்சினைகள் மிகவும் கடுமையானவை என சுட்டிக்காட்டியுள்ளார்.

இவற்றை ஒழிப்பதிலும் ஏனைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மிகவும் திறமையான முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறிய அவர், ஜனாதிபதியாக இருந்தவர் என்ற வகையில் அந்த அனுபவத்துடன் மீண்டும் ஜனாதிபதியாக வருவதில் தனக்கு சிரமம் இல்லை என்று குறிப்பிட்டார்.

அத்துடன், சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்குப் பிறகு தனது நல்லாட்சி காலம் சிறப்பான ஒன்றாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Share:

Related Articles