நாட்டுமக்களை மீண்டும் முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் நாட்டில் நோய்ப்பரவல் தொடர்பில் அதிகாரிகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் மீண்டும் JN 1 OMICRON உப பிறழ்வான புதிய கொவிட் வைரஸ் திரிபு பரவி வரும் நிலையிலேயே அமைச்சர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.