(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
தற்போதுள்ள முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை (11) முதல் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக 300 பெற்றோல் முச்சக்கரவண்டிகள் மின்சார முச்சக்கரவண்டிகளாக மாற்றப்பட உள்ளன.