NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மூளைக் காய்ச்சலைத் தடுப்பதற்கான தடுப்பூசி பற்றாக்குறை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மூளைக் காய்ச்சலைத் தடுப்பதற்கான தடுப்பூசி தற்போது சுகாதார அமைச்சிடம் இல்லை என்று மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் ஒன்றியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த மூளை நோய் பரவும் நாடுகளுக்குப் படிக்கச் செல்பவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நிறுவனத்தின் தடுப்பூசி மையம் இந்தத் தடுப்பூசியை வழங்கவுள்ளதாக சங்கத்தின் நிபுணர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

இந்நோய் பரவியுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்நாட்டிற்கு வந்தால் அது பெரும் பிரச்சினையை உருவாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தடுப்பூசியை தனிப்பட்ட முறையில் பெற்றுக்கொள்ள முடியும் என்றாலும் சில இடங்களில் இந்த தடுப்பூசி பாதுகாப்பற்ற முறையில் பதுக்கி வைத்திருப்பதால் வேறுவிதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles