யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளில் இயங்கி வந்த முகமூடி கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கொள்ளையிடப்பட்ட தங்கத்துடன் கைது செய்யப்பட்டதாக யாழ்.குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் முகமூடிகளை பயன்படுத்தி கொள்ளையடித்து வந்த கொள்ளை கும்பல் முகமூடி கொள்ளை கும்பல் என அழைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 28 பவுண் கொள்ளையிடப்பட தங்கமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், கொள்ளைக்கு பயன்படுத்திய வாள் மற்றும் உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன





