NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சியில் மாற்றம் – வெளியான அறிவித்தல்!

பிரபல தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இலங்கையில் நடத்தவிருந்த இசை நிகழ்ச்சி திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

யுவன் சங்கர் ராஜாவின் மாபெரும் இசை நிகழ்ச்சி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி சனிக்கிழமை மாலை சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவிருந்த நிலையில் பெரும்பாலானோரின் கோரிக்கைகளுக்கு அமைய கொழும்பு CR & FC மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (18) கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்றது.

இதன்போது, ஆரா எண்டர்டெய்மன்ட் நிறுவன முகாமைத்துவ இயக்குநர் ஆனண்ட் ராமநாதன், சதீஸ் ஜுவலரி தலைவர் ஆர்.சதாசிவம் மற்றும் புக் மை ஷோ பிரதம செயற்பாட்டாளர் சுஹைப் ஜவாஹிட் ஆகியோர் கலந்துக்கொண்டுக் கருத்துத் தெரிவிக்கும் போதே இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles