NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர் நீரில் மூழ்கி பலி!

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் நீச்சல் தடாகத்தில் நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கொக்குவில் பிரதேசத்தை சேர்ந்த முருகதாஸ் திலக்ஷன் என்ற 21 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ரஜரட்ட பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் இந்த மாணவன், பல்கலைக்கழகத்தின் ஏனைய மாணவர்கள் குழுவுடன் நேற்று (27) மாலை 5 மணியளவில் பல்கலைக்கழக நீச்சல் தடாகத்தில் நீராடச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share:

Related Articles