(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டாலும் சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நலிந்த குருகுலசூரிய தெரிவித்துள்ளார்.
எரிவாயு விலை குறைப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், எதிர்காலத்தில் விலையை திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதன் பயன் வாடிக்கையாளருக்கு அளிக்கப்படும் என்றார்.
வரவிருக்கும் பங்குகள் மற்றும் டொலரின் பெறுமதியின் அடிப்படையில் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், முனையத்தில் ஒரு மாதத்திற்கு போதுமான எரிவாயு சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.