NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லைக்காவின் ஞானம் அறக்கட்டளை சமூக சேவை திணைக்களத்துடன் இணைந்து நடத்திய விசேட தேவையுடையவர்களை வலுவூட்டுதல் நிகழ்ச்சித் திட்டம் இன்று திருகோணமலையில் ஆரம்பம்..!

லைக்காவின் ஞானம் அறக்கட்டளை சமூக சேவை திணைக்களத்துடன் இணைந்து நடத்திய விசேட தேவையுடையவர்களை வலுவூட்டுதல் நிகழ்ச்சித் திட்டம் இன்றைய தினம் திருகோணமலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் திருகோணமலை மாவட்டக்கிளையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட குறித்த நிகழ்வானது  திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட விசேட தேவையுடையவர்களுக்கான வலுவூட்டல் சம்பந்தமான செயலமர்வானது இன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் என்.மதிவண்ணன் பங்கேற்று நிகழ்வினை ஆரம்பித்துவைத்தார்.

மாற்றுத்திறனாளிகள் தமது பாடசாலைக்காலங்களுக்குப் பின்னராக அவர்களை வலுவூட்டும் செயற்திட்டங்கள் இதுவரை இல்லாதிருந்த நிலையில் அதனை ஆரம்பித்து வைக்கும்முகமாக குறித்த செயற்திட்டத்தின் போது சமூக மட்ட குழு ஒன்றும் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்பதும் விசேட அம்சமாகும், அதன் தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளிகள் தொடர்பான தகவல்களை திரட்டி அதனூடான வேலைவாய்ப்புக்கள் மற்றும் எதிர்கால செயற்திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

Share:

Related Articles