NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வருட ஆரம்பம் முதல் இதுவரை கொழும்பில் 100 தொழுநோயாளிகள் அடையாளம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் தற்போது வரை கொழும்பு மாவட்டத்தில் 100 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாக கொழும்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே அதிக தொழுநோயாளிகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (11) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் அதிக காசநோயாளிகள் கொழும்பு நகர எல்லையில் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு நகர எல்லையில் மாதமொன்றுக்கு 15 – 20 காசநோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்.

தொழுநோயாளிகள் மற்றும் காசநோயாளிகளை அடையாளம் காணாவிட்டால், அது வேறு ஒருவருக்கு பரவும் அபாயம் உள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

தொழுநோயை 18 மாதங்களில் குணப்படுத்திவிடலாம் என்றாலும், பாதுகாக்கப்படாவிட்டால் மீண்டும் வரும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு, மட்டக்களப்பு மாவட்டங்களில் தொழுநோய் அதிகளவு இனங்காணப்பட்டு வரும் நிலையில், இரு மாவட்டங்களிலும் கட்டுப்படுத்தினால் இந்நோயை முழுமையாக கட்டுப்படுத்தியது போலாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles