இலங்கையில் நடைபெற்றுவரும் வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக்கிண்ணத் தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளை ரசிகர்கள் இலவசமாக பார்வையிட முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக்கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் தகுதிபெற்றுள்ளன.
அரையிறுதிப்போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி என்பவை கொழும்பு பி.சரா ஓவல் மற்றும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவுள்ளன.
குறித்த இந்த போட்டிகளை பார்வையிடுவதற்கு ரசிகர்கள் மைதானத்துக்குள் இலவச அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
குறித்த போட்டிகளின் இறுதிப்போட்டியானது கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.