(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
வாழ்நாளில் 50 தடவைகள் மற்றும் 100 தடவைகள் இரத்ததானம் செய்தவர்களை மதிப்பீடு செய்யும் வேலைத்திட்டம் வட மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் தலைமையில் யாழ்ப்பாணம் – காரைநகர் தாதியர் கல்லூரியில் நேற்று (28) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இரத்த தானம் செய்த 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதுடன் அவர்களுக்கு விசேட சான்றிதழ்களும் நினைவுப் பரிசுகளும் வடமாகாண ஆளுநரின் கைகளால் வழங்கி வைக்கப்பட்டது.
உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு யாழ்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் டி.சத்தியமூர்த்தி உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.