(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
நாட்டில் விசா காலத்தை மீறி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
அபராத தொகை, 7 தொடக்கம் 14 நாட்களுக்கு 250 அமெரிக்க டொலர்களாகவும், 14 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தால் 500 அமெரிக்க டொலர்களாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதுமாத்திரமின்றி, அபராதத்துடன், விசா கட்டணமும் செலுத்தப்பட வேண்டும் என வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





