அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றின் அருகே Prionailurus viverrinus என்கின்ற மீன்பிடிப் பூனை (Fishing cat) இனத்தை சேர்ந்ததென நம்பப்படும் குட்டியொன்று இன்று ஒன்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது.
THE FISHING CAT என அழைக்கப்படும் மீன்பிடி பூனை(அரிய வகை புலி) என அழைக்கப்படுவதுடன் மக்கள் வாழும் பகுதியில் இவ்வாறான அரிய வகை புலிகள் காடுகளில் இருந்து உள் நுழைந்து மீன் உட்பட கிராம வாசிகளின் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில் இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த மீன்பிடிப் பூனை இலங்கையில் கொடுப்புலி என அழைக்கப்படுவதுடன் ஒரு நடுத்தர காட்டுப்பூனையாக குறிப்பிடப்படுகின்றது.இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன. கடந்த காலங்களில் இம்மாவட்ட பொதுமக்கள் சிலர் குறித்த அரிய வகை புலி போன்ற பூனை இனங்களை பிடித்துள்ளதுடன் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவமும் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.