NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்போருக்கான அறிவித்தல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கையில் விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்போர் சுமார் 5 கிலோமீற்றர் சுற்றுவட்டத்தில் பட்டம் விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் விடுத்துள்ளது.

முக்கியமாக இலங்கையில் இயங்கும் 5 விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்போருக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள விமான நிலையம், மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம், யாழ் சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு (ரத்மலானை) சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் அருகில் வசிப்போருக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட விமான நிலைய சுற்றுப்பரப்பினுள் பட்டம் விடுவதன் காரணமாக விமான ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பட்டங்கள் விமான விசிறிக்குள் சிக்கும் பட்சத்தில் அவை பாரிய சேதத்தை விளைவிக்க வாய்ப்பு உள்ளதாக வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles