NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளிநாட்டவர்களுக்கான புத்தாண்டு மரதன் ஓட்டப்  போட்டி!

அம்பலாங்கொட – அக்குரல பிரதேசத்தில் இடம்பெற்ற வெளிநாட்டவர்களுக்கான புத்தாண்டு மரதன் ஓட்டப்  போட்டியில் அதிகளவான வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் அங்கு இடம்பெற்ற புத்தாண்டு விளையாட்டு போட்டிகளிலும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை போன்ற ஒரு நாட்டுக்கு வந்து புத்தாண்டை கொண்டாடியதை நினைக்கும் போதே அற்புதமாக உணர்வதாக வெளிநாட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மக்கள் மிகவும் அன்பானவர்கள் நட்புறவுக் கொண்டவர்கள், அனைவரையும் வரவேற்கும் நன்மை கொண்டவர்கள் எனவு குறிப்பிட்டுள்ளனர்.

இது தங்கள் முதல் பயணம் போன்று உணர முடியவில்லை எனவும் இனிமேலும் தொடர்ந்து இலங்கைக்கு வருவோம் எனவும் கூறியுள்ளனர்.

வெளிநாட்டில் உள்ள நண்பர்களை இலங்கைக்கு வருமாறும் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

Share:

Related Articles