சட்டவிரோதமான முறையில் பதினெட்டு இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுக்களுடன் இலங்கை வந்த நபரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழு இன்று (04) கைதுசெய்துள்ளனர்.
48 வயதுடைய கல்முனை பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவரின் பயணப் பையில் 12,000 வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட “கோல்ட் லீஃப்” ரக சிகரெட்டுகள் அடங்கிய 60 சிகரெட் பைக்கெற்றுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரைக் கைதுசெய்துள்ளனர்.