NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வைத்தியசாலையில் வழங்கப்பட்ட ஊசியால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இளம் தாய் பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 23 வயதுடைய தாயொருவர் வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட ஊசி மூலம் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக குறித்த பெண் ராகமை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாஎல வடக்கு படகம பிரதேசத்தில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ராகமை வைத்தியசாலையின் சட்ட வைத்தியர் ஜே.சி.பி.பொலொன்வல, பெண்ணின் உடலில் கிருமி நுழைந்ததன் விளைவாக அவருக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியினால் ஏற்பட்ட ஒவ்வாமையினால் மரணம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles