NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹஜ் பெருநாளை கொண்டாட சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம் – சிறுமி ஒருவர் பலி…!

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சூரங்கள் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளதுடன், சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்பலகாமம் – அரபா நகரில் இருந்து உறவினர்களின் வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் தாய், தந்தை, இரண்டு பிள்ளைகள் உட்பட நான்கு பேர் பயணித்துள்ளனர்.

இந்நிலையில், மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், இந்த விபத்தில் சிறுமியின் தலையில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகவும், தந்தை, தாய் மற்றும் ஒன்றறை வயது கைக்குழந்தை ஆகியோர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

மேலும் உயிரிழந்த சிறுமியின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles