NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹோமாகம இரசாயன தொழிற்சாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை !

ஹோமாகம – கட்டுவன பிரதேசத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் தொடர்பில் இன்று கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த தொழிற்சாலையை கண்காணிப்பதற்காக குழுவொன்று அங்கு செல்லவுள்ளதாக அதன் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கிய குறித்த தொழிற்சாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ் பத்திரன தெரிவித்தார்.

Share:

Related Articles