NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அஜித்திற்கு சன் பிக்சர்ஸ் போட்ட கண்டிஷன்.

நடிகர் அஜித் துணிவு படத்தை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்க அஜித் நடித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தான் தொடர்ந்து நடந்து வந்தது. ஆனால் இப்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவில்லை, அடுத்தடுத்து படப்பிடிப்பு எப்போது எனவும் சரியாக தெரியவில்லை.இப்படத்தை தொடர்ந்து அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க இருக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பு ஜுன் மாதத்தில் இருந்து தொடங்க இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து அஜித்-சிவா கூட்டணி சன் பிக்சர்ஸ் தயாரிக்க உருவாக இருப்பதாக செய்திகள் வந்தன. இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் அஜித்திற்கு போட்டுள்ள ஒரு முக்கிய கண்டிஷன் குறித்த தகவல்கள் வைரலாகியுள்ளது. அதாவது அஜித் கேட்ட சம்பளத்திற்கு சன் பிக்சர்ஸ் ஒப்புக்கொள்ளவில்லையாம். அதேபோல் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக அஜித் 2 மணிநேரம் ஒதுக்க வேண்டும் என்றும் கறாராக சொல்லிவிட்டார்களாம்.

Share:

Related Articles