கடந்த 2014ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தவர் நகைச்சுவை நடிகை ஆர்த்தி. நட்சத்திர பேச்சாளராக தேர்தல் சமயங்களில் மேடைகளில் தோன்றினார். ஜெயலலிதா அம்மையாரின் மறைவுக்கு பிறகு ஆர்த்தி அதிமுகவில் இருந்து விலகினார்.
இந்நிலையில் தற்போது கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். அவரது கணவர் கணேஷ்கர் ஏற்கனவே பாஜகவில் செயல்பட்டு வரும் நிலையில் ஆர்த்தியும் பாஜகவில் ஐக்கியமானார்.