NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அருண் விஜய்யின் 36வது திரைப்படத்தின் அப்டேட் வெளியானது!

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர்களுள் அருண் விஜய்க்கு முக்கிய இடமுண்டு. அந்த வகையில் இன்றைய தினம் அவருடைய 36வது திரைப்படத்தி\ற்கான பூஜை நிறைவடைந்துள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தை மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார். BTG Universal நிறுவன தலைவர் திரு.பாபி பாலச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு, BTG Universal நிறுவன தலைமை திட்ட இயக்குநர் டாக்டர் M.மனோஜ் பெனோ அனைத்து நிர்வாக பணிகளைகளையும் செய்கிறார்.

அருண் விஜய் பொதுவாகவே ஆக்சன் திரைப்படங்களில் பட்டையை கிளம்பிவிடுவார். அந்த வரிசையில் இத்திரைப்படமும் அதிரடி சண்டைக் காட்சிகளுடன், பரபரப்பான ஆக்சன் திரில்லராக உருவாகவுள்ளது. திரைப்படத்தில் கதாநாயகியாக சித்தி இத்னானி நடிக்கிறார். அத்தோடு தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்செண்ட் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் துவக்கவிழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தியதுடன், கிளாப் அடித்து படத்தினை துவக்கி வைத்தார்..இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles