இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து வெளியான படம் ‘ஆதிபுருஷ்’ இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் அதே சமயத்தில் எதிர்பார்ப்பும் தொடர்சியாக கிளம்பி வருகிறது. ஆதிபுருஷ் படம் ரூ.300 கோடி வசூலை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.ஆதிபுருஷ் படத்தில் சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கக்கோரி நேபாளத்திலும் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், ஆதிபுருஷ் திரைப்படத்தை உடனே தடை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில் “ஆதிபுருஷ் படத்தில் ராமர், அனுமனை விடியோ கேம் கதாபாத்திரம் போல சித்தரித்தும் அவதூறு செய்யும் வகையில் படத்தில் வசனம் இடம்பெற்றிருப்பது உலகத்தில் உள்ள இந்தியர்கள் மனதை புண்படுத்துகிறது. சனாதன தர்மத்தை அவமதிக்கு இந்த படத்தை உடனே தடை செய்ய வேண்டும் என்றும் OTT தளங்களில் ஆதிபுருஷ் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.