ஐஸ்வர்யா ராயும், கணவரும் விவாகரத்து பெறப் போகிறார்களாம் என கடந்த சில மாதங்களாகவே பேசப்படுகிறது.
இந்நிலையில் நானும், ஐஸ்வர்யா ராயும் விவாகரத்து பெறுகிறோம் என அவரின் காதல் கணவரான அபிஷேக் பச்சன் பேசிய வீடியோ வெளியாகி வைரலானது.
என்ன அபிஷேக் இப்படி சொல்லிட்டீங்களே. ஐஸ்வர்யா ராய் மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைக்காதா என எல்லோரும் ஏங்க, நீங்கள் என்னவென்றால் அந்த அழகியை விவாகரத்து செய்வதாக சொல்கிறீர்களே என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் அபிஷேக் பச்சன் கூறியதாவது, நான் இன்னும் திருமண பந்தத்தில் தான் இருக்கிறேன். இது குறித்து வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை. எல்லாத்தையும் ஊதி பெரிதாக்கிவிட்டீர்கள். உங்களுக்கு Story தேவை. அதனால் அப்படி செய்கிறீர்கள். நாங்கள் பிரபலங்கள், அதை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும் என்றார்.