NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஓ.டி.டி தளத்தில் புதிய சாதனை படைத்துள்ள ‘விடுதலை’

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.

நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி, பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருந்த விடுதலை திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படமாகும்.

படத்தின் முதல் பாகம் மார்ச் மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியானது.

ஏப்ரல் 28ஆம் திகதி ‘Director Uncut Version’  என படத்தின் முழுபகுதியும் Zee 5 ஓடிடி தளத்தில் வெளியாகி புதிய சாதனையை படைத்திருக்கிறது.

படம் வெளியாகி 20 நாட்களை கடந்திருக்கும் நிலையில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. முதல் பாகமே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாவது பாகத்தை இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles