NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிரிக்கெட் கதைக்களம் – பா.ரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன், சாந்தனு நடிக்கும் ‘ப்ளூ ஸ்டார்’

பா.ரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன், சாந்தனு நடிக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ (BLUE STAR) படத்தின் முதல் தோற்றமும், பாடல் வீடியோ ஒன்றும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் நீலம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பா.ரஞ்சித் தயாரிக்கும் படம் ‘ப்ளூ ஸ்டார்’. அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்றத்தை பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து ‘ப்ளூ ஸ்டார்’ ஆல்பம் என்ற பெயரில் படத்தின் பாடல் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles