கடவுள் நம்பிக்கை இல்லாத நாயகன் அரசு வேலை கிடைத்து காஷ்மீருக்கு செல்கிறார். அங்கு நாயகி சமந்தாவை சந்திக்கும் விஜய் தேவரகொண்டா, முதல் பார்வையிலேயே காதல் வயப்படுகிறார். சமந்தாவை துரத்தி துரத்தி காதல் செய்யும் விஜய் தேவரகொண்டா, ஒரு கட்டத்தில் சமந்தாவை காதலில் விழ வைக்கிறார்.
இறுதியில் விஜய் தேவரகொண்டா, சமந்தா இருவரின் திருமண வாழ்க்கை என்ன ஆனது? பெற்றோர்கள் இவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொண்டார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
காதலை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் சிவா நிர்வாணா. முதல் பாதி காதல், இரண்டாம் பாதி கலகலப்பு, சென்டிமென்ட் என திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார்.