NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சந்தானத்தின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல நடிகர்! எதிர்ப்பார்க்காத ஒரு கூட்டணி

நடிகர் சந்தானம் டிவியில் இருந்து சினிமாவில் காமெடியனாக வந்தவர். அதன் பின் படிப்படியாக முன்னேறி ஹீரோவாக படங்கள் நடிக்க தொடங்கிய அவர் சமீப காலமாக பெரிய வெற்றி கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.கடந்த சில வருடங்களாக சந்தானம் நடிப்பில் வந்த படங்கள் தோல்வி அடைந்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது சந்தானம் அடுத்து நடிகர் காதல் சுகுமார் கூட்டணியில் ஒரு படம் நடிக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. நீண்ட கால நண்பருக்கு தற்போது தனது படம் இயக்கும் வாய்ப்பை கொடுத்து இருக்கிறார் சந்தானம்.

காதல் படத்தில் நடித்து பிரபலமான சுகுமார், இரண்டு திரைப்படங்களையும் இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles