Super Star ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “ஜெயிலர்” திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
படம் வெளியாவதற்கு முன் ரஜினிகாந்த் இமயமலைக்கு பயணம் சென்றார். அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் மாநில முதல்வர் “யோகி ஆதித்யநாத்”, “அகிலேஷ் யாதவ்’ ஆகியோரை சந்தித்து பேசினார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த போது ரஜினி அவரது காலில் விழுந்து வணங்கினார். இது பெரும் சர்ச்சையானது.
ஏனெனில் தன்னை விட 21 வயது குறைவான யோகி கால்களில் ரஜினி விழுந்து வணங்கியதை பலரும் விமர்சித்தனர்.
இந்த நிலையில் நேற்று சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “4 ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலை சென்று வந்தது மகிழ்ச்சியாக இருந்தது, தொடர்ந்து யோகி ஆதித்யநாத் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், வயது குறைவானவராக இருந்தாலும் யோகி ஒரு சன்யாசி.
சன்னியாசி காலில் விழுந்து வணங்குவது எனது பழக்கம். நட்பு ரீதியாக மட்டுமே உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரை சந்தித்து பேசினேன்.
“ஜெயிலர்” படத்தை வெற்றி படமாக்கிய தமிழக மக்களுக்கு எனது நன்றி” என கூறினார்.