NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சினிமா படமாகும் பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை கதை

கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி ஆகியோரின் வாழ்க்கை ஏற்கனவே திரைப்படமாக வந்துள்ளது. தற்போது கிரிக்கெட் வீரர் பல்வங்கர் பாலு வாழ்க்கையும் சினிமா படமாகிறது. இந்த படத்தில் பல்வங்கர் பாலு கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கான் நடிக்கிறார்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பல்வங்கர் பாலு புனேயில் உள்ள ஒரு கிரிக்கெட் கிளப்பில் தனது பயணத்தை ஆரம்பித்து பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தேர்வு செய்யப்பட்டார்.

அவரது கிரிக்கெட் வாழ்க்கை எத்தகைய சவால் நிறைந்ததாக இருந்தது என்பதை இந்த படத்தில் காட்ட உள்ளனர்.

Share:

Related Articles