NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சூர்யா 44 படக்குழு விவரங்கள் வெளியீடு

நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சூர்யா 44 படத்திற்கு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள ஷஃபீக் முகமது அலி படத்தொகுப்பு செய்கிறார்.

சண்டை பயிற்சி பணிகளை கெச்சா கம்பக்தீ மேற்கொள்கிறார், கலை இயக்க பணிகளை ஜாக்கியும், ஆடை வடிவமைப்பு பணிகளை பிரவீன் ராஜா மேற்கொள்கின்றனர். சூர்யா 44 படக்குழு தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்த போஸ்டர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles