NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பு, Bollywoodல் எனக்குக் கிடைக்கவில்லை – ஜோதிகா

1997ம் ஆண்டு வெளியான `Doli Saja Ke Rakhna’ என்ற Bollywood படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஜோதிகா.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த வருடம்தான் மீண்டும் Bollywoodல் அடியெடுத்து வைத்துள்ளார்.  ‘சைத்தான்’ படத்தையடுத்து மற்றொரு Bollywood திரைப்படமான ‘ஶ்ரீகாந்த்’திலும் நடித்துள்ளார். அது தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

“எனது ஆரம்பக் கால சினிமா வாழ்வில் தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பு எனக்குப் Bollywoodல் கிடைக்கவில்லை. Bollywoodல்தான் நான் முதன்முதலில் அறிமுகமானேன். என் முதல்Bollywood படத்தில் எனக்குச் சரியாக வரவேற்பு கிடைக்கவில்லை.

 தற்போதுதான் Bollywoodலிருந்து என்னை அணுகினார்கள். கதைகள் கேட்டேன். பிடித்திருந்தது. தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வருகின்றன. அதனால், தற்போது Bollywoodல் மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.

Share:

Related Articles