NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘துருவ நட்சத்திரம்’ பட Update கொடுத்த கௌதம் மேனன்

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை கௌதம்மேனன் இயக்கியுள்ளார். ரீத்துவர்மா , பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

துருவ நட்சத்திரம் படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில்,

சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் ‘விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்’ என்றும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது.

மேலும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தீவிரம் காட்டி வருவதாக பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் ஹாரிஷ் ஜெயராஜ் கான்சர்டில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் சில விஷயங்களை இயக்குனர் கௌதம்மேனன் பகிர்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், இப்படத்திற்காக 3 பாடல்களை ஹாரிஷ் ஜெயராஜ் தயார் செய்துள்ளதாகவும்,

பாடல்களை July மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், வாரணம் ஆயிரத்தில் இடம்பெற்று வரவேற்பை பெற்ற ‘அஞ்சல’ பாடல் போன்ற ஒரு பாடலை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles