NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தொழில் அதிபராக கலக்கி வரும் நடிகை “ஆலியா பட்”

Bollywoodல் முன்னணி நடிகையாக திகழும் ஆலியா பட், திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்தியாவின் பணக்கார நடிகையாக கருதப்படும் ஆலியா பட்டுக்கு, ரூ.560 கோடி (இந்திய பெறுமதி) மதிப்பிலான சொத்துகள் இருக்கிறது.

இதுதவிர வெற்றிகரமான பெண் தொழில் அதிபராகவும் ஆலியா பட் திகழ்கிறார். பிரபல ஆடை Brend உரிமையாளரான ஆலியா பட் நிர்வகிக்கும் நிறுவனத்தின் மதிப்பீடு தற்போது ரூ.150 கோடியை (இந்திய பெறுமதி) எட்டியிருக்கிறது. இந்த Brend ஆடைகள் இந்தியா தாண்டி வெளிநாடுகளிலும் மிகவும் விரும்பப்படுகிறதாம்.

இந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படி சினிமா தாண்டி தொழில் அதிபராகவும் ஆலியா பட் கலக்கி வருகிறார்.

Share:

Related Articles