NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பகத் பாசில் – ஜீத்து ஜோசப் கூட்டணி

மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பகத் பாசில். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் ஆவேசம். ஓடிடி-யிலும் ஆவேசம் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பகத் பாசில் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பகத் பாசில் பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் உடன் இணைகிறாராம். ஆம், மலையாள திரையுலகில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் ஜீத்து ஜோசப்.இவர் இயக்கத்தில் வெளிவந்த திரிஷ்யம் படத்தை பார்க்காத சினிமா ரசிகர்களே இருக்க முடியாத. மேலும் இவர் இயக்கத்தில் கடைசியாக நெரு எனும் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த நிலையில், பகத் பாசில் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் புதிய படம் உருவாகுகிறது என அறிவித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles