NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பழம்பெரும் பொலிவுட் நடிகை சுலோச்சனா லட்கர் காலமானார்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பழம்பெரும் பொலிவுட் நடிகை சுலோச்சனா லட்கர் தனது 94ஆவது வயதில் மும்பையில் காலமானார்.

வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர் சில வாரங்களுக்கு முன் உடல்நிலை மோசமடையவே மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்ற வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் 1930இல் பிறந்த அவர் தனது 25ஆவது வயதில் சினிமாவில் அறிமுகமானார்.

கட்டி பட்டங், மேரே ஜீவன் சாதி உள்ளிட்ட ஹிந்தி, மராத்தியில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் இவரது பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக இந்திய மத்திய அரசு 2004இல் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

நடிகை சுலோச்சனா மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி, நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles