NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிச்சைக்காரன் 3.. சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் ஆண்டனி..

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பிச்சைக்காரன். இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. இதை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 கடந்த வாரம் வெளிவந்தது.

இப்படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, இசையமைத்து, தயாரித்து, நடித்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை.குறிப்பாக வசூலில் இதுவரை உலகளவில் ரூ. 22 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் பேசிய விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 3 உருவாகிறது என்று கூறியுள்ளார். மேலும் பிச்சைக்காரன் 1 மற்றும் 2 படங்களின் தொடர்ச்சியாக இருக்காது.பிச்சைக்காரன் 3 புதிய கதைக்களம் கொண்டதாக இருக்கும் என தெரிவித்துள்ளார். பிச்சைக்காரன் 3 2025ல் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles