NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொன்னியின் செல்வன் பாகம் – 2 Amazon Primeஇல் வெளியானது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பொன்னியின் செல்வன் 2 வெளியாகியுள்ளது.

அமரர் கல்கியின் நாவலை அடிப்படையாக வைத்து, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் அமேசோனில் வெளியாகியுள்ளது.

முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதி உலகெங்கும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தது.

ஏ.ஆர் ரஹ்மானின் இசையமைப்பில் உருவான இப்படத்தின் முதல் பாகம் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. முதல் பாகத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி வெளியானது.

வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பொன்னியின் செல்வன் 2 வெளியாகியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles