NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மே 10 வெளியாக தயாராகவுள்ள சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்படம்

இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ எனும் திரைப்படத்தில் சந்தானம், பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பால சரவணன், முனீஸ் காந்த், மாறன், லொள்ளு சபா சுவாமிநாதன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுஷ்மிதா அன்புச் செழியன் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஜி என் அன்புச் செழியன் வழங்குகிறார்.

இப்படத்தின் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி, ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles