NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“ரவீந்திரநாத் தாகூர்” ஆக நடிக்கும் அனுபம் கேர்

ஹிந்தியில் முக்கிய நடிகர்களில் ஒருவராகத் திகழ்பவர் அனுபம் கேர். இதுவரை 537 படங்களில் நடித்துள்ள அவர், தனது அடுத்த படத்தில் சுதந்திர போராட்ட வீரரும், இந்திய தேசிய கீதத்தை இயற்றியவருமான ரவீந்திரநாத் தாகூர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இதற்கான புகைப்படத்தையும் அனுபம் கேர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “எனது 538-வது படத்தில் குருதேவ் ரவீந்திரநாத் தாகூராக நடிப்பதில் மகிழ்ச்சி. உரிய நேரத்தில் விவரங்களை வெளியிடுவேன். அவரை திரையில் கொண்டுவரும் வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம். இந்தப் படம் குறித்த கூடுதல் விவரங்களை விரைவில் உங்களுடன் பகிர்வேன்” என்று  தெரிவித்துள்ளார்.





Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles