NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘ராகுல் மோடியுடனான’ உறவை கிட்டத்தட்ட உறுதி செய்த ‘ஷ்ரத்தா கபூர்’

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷ்ரத்தா கபூர் தனது Instagram பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.

அந்த புகைப்படத்தில், ஷ்ரத்தா கபூர் ஊதா நிற உடையணிந்து இருக்கிறார். குறிப்பாக அதில் அவர் ‘R’ எழுத்து பதித்த செயினை அணிந்திருந்தார்.

இந்த ‘R’, ராகுல் மோடியை குறிப்பதாக இதனை பார்த்த பலரும் தெரிவித்தனர்.

ஷ்ரத்தா கபூர் பகிர்ந்த 4 புகைப்படங்களிலும் அந்த ‘ஆர்’ தெரிகிறது, எனவே இதை அவர் வேண்டுமென்றே செய்ததாக தெரிகிறது என்றும் கூறினர். மேலும் மற்றொருவர், அவர்கள் இரண்டு வருடங்களாக காதலித்துவருவதாகவும் இந்த வருடம் இருவரும் நிச்சயம் திருமணம் செய்து கொள்வார்கள் எனவும் கூறினார்.

இதன் மூலம் ராகுல் மோடியுடனான உறவை கிட்டத்தட்ட ஷ்ரத்தா கபூர் உறுதி செய்துள்ளதாக தெரிகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles