NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ராஜமௌலி கொடுத்த அட்வைஸ்.. ஆலியா பட் இதை மறக்கவே மாட்டாராம்

இயக்குனர் ராஜமௌலி தற்போது இந்திய சினிமா மட்டுமின்றி உலக அளவில் பிரபலமான இயக்குனராக மாறிவிட்டார். அதற்கு காரணம் அவர் இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் ஜெயித்தது தான்.

RRR படத்தில் ஒரு ரோலில் நடித்து இருந்த ஹிந்தி நடிகை ஆலியா பட் தற்போது ஒரு பதிவில் ராஜமௌலி பற்றி பேசி இருக்கிறார். மேலும் தனக்கு அவர் கொடுத்த அட்வைஸ் பற்றியும் கூறி இருக்கிறார் அவர்.

“நடிப்பதற்கு எதாவது அட்வைஸ் இருந்தால் கொடுங்க என கேட்டேன். ‘நீ எதை தேர்வு செய்தாலும் அதை முழு love உடன் செய்ய வேண்டும். படம் தோல்வி அடைந்தாலும், ஆடியன்ஸ் உன் கண்களில் இருக்கும் அந்த loveஐ கண்டிப்பாக கவனிப்பார்கள் என சொன்னார்.” இவ்வாறு ஆலியா பட் தெரிவித்து இருக்கிறார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles